மகிந்தவை கடவுளாக கருத வேண்டும்: அநுரவுக்கு அர்ச்சுனா அறிவுரை!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வடக்கில் சுதந்திரமாக நடைபயிற்சி செய்ய முன்னாள் ஜனாதிபதி மகிந்தவே காரணம், அவரை அரசாங்கம் கடவுளாக நினைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இன்று (20.01.2026) இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பினர் தான் நாட்டில் இனவாதத்தை பரப்பி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு விஜயம்
ஜனாதிபதி வடக்குக்கு வருகைத் தந்து இனவாதத்தை தூண்டுவதை நாங்கள் ஒருபோதும் விரும்ப மாட்டோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “வடக்கில் நிறைவேற்றப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. ஜனாதிபதியின் வடக்கு வருகையின் போது பலாலியில் உள்ள காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
வடக்கு மக்கள் நம்பி வாக்களித்தனர். தமிழ் மக்களின் பிரபாகரன் போல ஜனாதிபதி இருப்பார் என நினைத்தே வடக்கு மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.
வடக்கில் வந்து பொங்கல் கொண்டாட அவருக்கு நாங்கள் வாக்களிக்கவில்லை.
தெற்கில் உள்ளவர்கள் இனவாதத்தை பரப்பவே வடக்குக்கு வருவதாக ஜனாதிபதி அன்றைய தினம் கூறியிருந்தார். நான் அதை மறுக்கிறேன்." என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |