இலங்கைக்குக் கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது

Sri Lanka India Law and Order
By Shalini Balachandran Mar 29, 2026 11:49 PM GMT
Report
Courtesy: Nayan

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்குக் கடல் வழியாகப் படகு மூலம் இலங்கைக்குக் கடத்துவதற்காக குடோன் ஒன்றில் பதுக்கி வைப்பதற்காக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட இந்திய மதிப்பில் சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா, சமையல் மஞ்சள், நிலக்கரி மற்றும் வெளிநாட்டுச் சிகரெட்டுகள் உள்ளிட்ட கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மரைன் காவல்துறையினர் வாகனத்துடன் இவற்றைப்பறிமுதல் செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தெற்கு லெபனானில் பாதுகாப்பு மண்டலத்தை விரிவுபடுத்த நெதன்யாகு உத்தரவு!

தெற்கு லெபனானில் பாதுகாப்பு மண்டலத்தை விரிவுபடுத்த நெதன்யாகு உத்தரவு!

உரிய ஆவணங்கள்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கீழக்கரை அருகே நேற்று முன்தினம் (28-03-2026) இரவு, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைச் சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாகச் சென்ற ஒரு சரக்கு வாகனத்தைத் தடுத்து நிறுத்திச் சோதனை செய்துள்ளனர்.

அந்த வாகனத்தில் சமையல் மஞ்சள் மூட்டைகள் இருந்ததையடுத்து அதற்கான ரசீதை அதிகாரிகள் கேட்டபோது ஓட்டுநர் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்ததால் வாகனம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

இலங்கைக்குக் கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது | Ramanathapuram Smuggling To Sri Lanka Seized

இருப்பினும் அதிகளவு மஞ்சள் மூட்டைகள் கொண்டு செல்லப்படுவது குறித்துச் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், இது பற்றி மரைன் காவல் ஆய்வாளர் ஜான்சிராணிக்கு உடனடியாகத் தகவல் அளித்தனர்.

இதனடிப்படையில், அந்தச் சரக்கு வாகனத்தை மரைன் காவல்துறையினர் இரகசியமாகப் பின்தொடர்ந்தனர்.

ஈராக் மக்களுக்கு ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா காமேனி நன்றி!

ஈராக் மக்களுக்கு ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா காமேனி நன்றி!

வாகன பறிமுதல் 

மண்டபம் வடக்குக் கடற்கரை அருகே உள்ள டி.நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் வாகனத்திலுள்ள பொருட்களை இறக்கிப் பதுக்க முயன்ற போது மரைன் காவல்துறையினர் அந்த இடத்தைச் சுற்றிவளைத்தனர்.

அப்போது சரக்கு வாகனத்தைச் சோதனை செய்த போது இலங்கைக்குக் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த இரண்டு கிலோ கஞ்சா, இரண்டு டன் எடை கொண்ட சமையல் மஞ்சள் மூட்டைகள், 10,000 வெளிநாட்டுச் சிகரெட்டுகள், 100 பண்டல் பீடி, 308 கிலோ நிலக்கரி, 56 லிட்டர் பூச்சிக்கொல்லி, 10 கிலோ ஏலக்காய் மற்றும் 60 கிலோ மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இலங்கைக்குக் கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது | Ramanathapuram Smuggling To Sri Lanka Seized

இதையடுத்து கடத்தல் பொருட்களுடன் வாகனத்தைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், சரக்கு வாகனத்தின் உரிமையாளர் மற்றும் அந்த குடோனின் உரிமையாளர் ஆகிய இருவரையும் பிடித்து மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரைன் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடத்தல் பொருட்கள் அனைத்தும் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு, பின்னர் மண்டபம் வடக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து படகில் இலங்கைக்குக் கடத்தத் திட்டமிடப்பட்டது தெரியவந்துள்ளது.

சமையல் மஞ்சள் மற்றும் கஞ்சா உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்படும் நிலையில் தற்போது முதன்முறையாக நிலக்கரி மூட்டைகள் பிடிபட்டுள்ளது பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெற்கு லெபனானில் பாதுகாப்பு மண்டலத்தை விரிவுபடுத்த நெதன்யாகு உத்தரவு!

தெற்கு லெபனானில் பாதுகாப்பு மண்டலத்தை விரிவுபடுத்த நெதன்யாகு உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020