இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள்

Fishing Sri Lanka SL Protest Rameswaram
By Shalini Balachandran Feb 25, 2024 11:09 AM GMT
Report

இலங்கைச் சிறையில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் இன்றோடு இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் போது தூத்துக்குடி வரும் பாரதப் பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ஐந்து ராமேஸ்வர கடற்றொழிலாளர்களை இலங்கை நீதிமன்றம் வெலிக்கடை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

ஊழியர்களின் சம்பள உயர்வு : தெளிவூட்டல் அறிக்கையை வெளியிட்ட மத்திய வங்கி

ஊழியர்களின் சம்பள உயர்வு : தெளிவூட்டல் அறிக்கையை வெளியிட்ட மத்திய வங்கி

விடுவிக்க கோரி

இதனடிப்படையில் இலங்கை சிறையில் உள்ள ஐந்து கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் 2018 ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இலங்கை வசம் உள்ள 151 விசைப் படகுகளை விடுவிக்க கோரியும் மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் | Rameswaram Fishermen S Hunger Strike Protest

இந்நிலையில் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு கடற்றொழிலாளர்கள் மற்றும் சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் நேற்று காலை 10 மணியில் இருந்து தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

கடற்றொழிலாளர்களின் இந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

மிரட்டப்பட்டே ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்துச் வரப்பட்டோம்- மட்டக்களப்பில் அச்சம் வெளியிடும் அதிபர்களும் ஆசிரியர்களும்!!

மிரட்டப்பட்டே ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்துச் வரப்பட்டோம்- மட்டக்களப்பில் அச்சம் வெளியிடும் அதிபர்களும் ஆசிரியர்களும்!!

உண்ணாவிரதம்

இந்த போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில மற்றும் இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் | Rameswaram Fishermen S Hunger Strike Protest

மேலும் கடற்றொழிலாளர்களின் இந்த போராட்டம் காரணமாக தங்கச்சி மடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கடற்றொழிலாளர்கள் இலங்கை நீதிமன்றத்தால் கடற்றொழிலாளர்களை விடுதலை செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என நேற்று இரவு முழுவதும் உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழர்களைக் கொன்று - ஆடி கொண்டாட்டம் நடாத்திய இந்தியப் படையினர்

தமிழர்களைக் கொன்று - ஆடி கொண்டாட்டம் நடாத்திய இந்தியப் படையினர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் whatsapp இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி