சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம்(படங்கள்)
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இராமேஸ்வரத்தைச் சேர்ந்த கடற்தொழிலாளர்களை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்ததைக் கண்டித்து அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டமொன்றினை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இப்போராட்டத்தினை எதிர்வரும் (3) திகதி மாலை 4 மணியளவில் சென்னை தொடருந்தை மறித்து நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் நவம்பர்( 6)ஆம் திகதி காலை முதல் கடற்தொழிலாளர்களை விடுதலை செய்யும் வரை தொடர்ந்து கடற்தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

வேலை நிறுத்தப் போராட்டம்
இன்றிலிருந்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் கடற்தொழிலாளர்கள் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று(28) இரவு இராமநாதபுரம் மாவட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 கடற்தொழிலாளர்களையும் மூன்று ரோலர் படகுகளையும், நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மேலும் 2 படகு அதிலிருந்து 14 கடற்தொழிலாளர்களையும் சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 14 மணி நேரம் முன்