இஸ்ரேலிய உளவு வலையமைப்பு ஈரானில் அம்பலம்: 20 பேர் அதிரடிக் கைது
இஸ்ரேலிய உளவுத்துறையுடன் இணைந்து உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், 20 பேரை ஈரானியப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் நிர்வாக மையமான உருமியா (Urmia) நகரில் இந்தக் கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இஸ்ரேலுடன் தொடர்புடைய கூலிப்படையினரின் பல வலையமைப்புகளைப் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து முறியடித்துள்ளதாக மாகாண வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
கைது செய்யப்பட்ட நபர்கள் இராணுவம், காவல்துறை மற்றும் ஏனைய பாதுகாப்பு தொடர்பான இடங்கள் குறித்த தகவல்களை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் சீயோனிச எதிரியுடன் ஒத்துழைத்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் 20 சந்தேக நபர்களும் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, ஈரான் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன.
அச்சுறுத்தல்களைத் தடுத்து நிறுத்துவதற்குத் தற்காப்பு அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கைபேசிகளுக்கு முன்னெச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்பு அறைகளுக்குச் செல்லுமாறும், மறு அறிவித்தல் வரும் வரை அங்கேயே இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |