புலம்பெயர்தலை கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் முக்கிய நாடு!
பிரான்சில் புதிதாக ஆட்சியமைத்துள்ள அரசு, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த திட்டமிட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் படி, குறித்த விடயம் தொடர்பில் புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்த பிரதமர் மிஷெல் பார்னியேர் அரசு திட்டமிட்டு வருகிறது.
அத்துடன், 2025 தொடக்கத்திலேயே புலம்பெயர்தல் சட்டம் தொடர்பான யாப்பு ஒன்றை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய அந்நாடு தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதிய சட்டம்
கடந்த செப்டம்பர் மாதம் பிரான்ஸ் மாணவி ஒருவருக்கு புலம்பெயர்ந்த ஒருவரால் நேர்ந்த கொடூரத்தை தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும் மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலை உருவானது.
இதன் காரணமாக குறித்த விடயம் தொடர்பில் ஆழ்ந்த விவாதங்கள் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில், புலம்பெயர்தலை கடுமையாக கட்டுப்படுத்தும் வகையில் மிஷெல் பார்னியேர் அரசு புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவரும் முயற்சியில் மும்முரமாக செயற்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |