ஈராண்டில் அபிவிருத்தி அடையுமா இலங்கை? குறுகிய கால திட்டத்தை வெளியிட்டார் ரணில்
இரண்டு வருட காலத்தில் இலங்கையை அபிருத்தி அடைந்த நாடாக மாற்ற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
இணையவழிக் கலந்துரையாடலொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
தற்போதைய அரசியல் நிலைமையை மக்கள் அடியோடு வெறுக்கிறார்கள்.உண்மையான மற்றும் நிலையான கொள்கையுடைய அரசாங்கத்தை தோற்றுவிக்க எண்ணுகிறார்கள்.
இதன் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக மாற்றமடைந்துள்ளது. பொருளாதாரம், சுகாதாரம், ஜனநாயகம் மற்றும் சுற்றுசூழல் உள்ளிட்ட பிரதான விடயங்களை கொண்ட குறுகிய காலத்திட்டத்தை ஐக்கிய தேசிய கட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியவர்களையும், எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கியவர்களையும் ஒன்றினைத்து அரசியலில் மாற்றம் ஏற்படுத்த எம்மால் முடியும்.
பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை குறுகிய காலத்திட்டத்திற்கமைய சரி செய்தால் நாட்டை 20 வருட காலத்திற்குள் முன்னேற்றமடைய செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்