அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரை: ரணில் கருத்து

Ranil Wickremesinghe Government Employee Sri Lanka Government
By Thulsi Sep 04, 2024 02:47 AM GMT
Report

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து நீக்கிக் கொள்ளுமாறும் தான் அதனை நிறைவேற்றி முடித்து விட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி கட்சிகளின் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

பெல்மடுல்ல வாராந்த சந்தை வளாகத்தில் நேற்று (03) நடைபெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். 

ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது: ''அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான அறிக்கையை உதய செனவிரத்ன (Udaya Seneviratne) இன்று என்னிடம் சமர்ப்பித்தார்.

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: தேர்தல் சட்டங்களை மீறுவதாக குற்றச்சாட்டு

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: தேர்தல் சட்டங்களை மீறுவதாக குற்றச்சாட்டு

சம்பள உயர்வு

நாம் அளித்த மற்றொரு வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். நாம் வாக்குறுதி அளிப்பதற்காக மேடைகளில் ஏறுவதில்லை.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரை: ரணில் கருத்து | Ranil Abt Salary Allowance Hike For Govt Employees

வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு தான் மக்கள் முன்னிலையில் சொல்கிறேன். தங்கள் விஞ்ஞாபனங்களில் உள்ள சம்பள உயர்வு குறித்த வரிகளை நீக்கிவிடுமாறு ஜே.வி.பியிடமும் ஐ.ம.சயிடமும் கேட்டுக் கொள்கிறோம்.

2023 இல் வாழ்க்கைச் செலவு உயர்ந்து இருந்தது. தற்பொழுது ரூபா பலப்படுத்தப்பட்டது. வருமானம் அதிகரிக்கப்பட்டது. 2024 பல நிவாரணங்கள் வழங்கியுள்ளளோம்.

அரச ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவு என்பன அதிகரிக்கப்பட்டுள்ளன. வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளது. இதனுடன் எமது செயற்பாடுகளை நிறுத்தப் போவதில்லை.

ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சித் தகவல்: சலுகைகள் கொட்டிக்கிடக்கும் விஞ்ஞாபனம்

ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சித் தகவல்: சலுகைகள் கொட்டிக்கிடக்கும் விஞ்ஞாபனம்

மொத்தத் தேசிய உற்பத்தி

ரூபா மேலும் பலமடையும். இரண்டொரு வருடங்கள் செயற்படுவதால் மாத்திரம் நாட்டில் முழுமையான ஸ்திர நிலை ஏற்படாது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரை: ரணில் கருத்து | Ranil Abt Salary Allowance Hike For Govt Employees

எமது திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். மொத்தத் தேசிய உற்பத்தியை மேலும் அதிகரிக்க வேண்டும். பணம் அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளது.

இருக்கும் வருமானத்தை கொண்டு செலவுகள் மேற்கொள்ளப்படுகிறன. அரச துறை மட்டுமன்றி தனியார் துறை சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐ.ம.ச மற்றும் தே.ம.ச என்பன வருமானத்தை குறைத்து செலவை குறைப்பதாக குறிப்பிட்டுள்ளது.

சஜித்தினால் வெல்ல முடியாது. சஜித்திற்கு வாக்களித்து அனுரவை பலப்படுத்தாதீர்கள். செப்டம்பர் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். தவறினால் கேஸும் இல்லை. எதிர்பார்க்கும் மாற்றமும் நடக்காது" என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்கும் 24 வீத சம்பள அதிகரிப்பு : சஜித் உறுதி

ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்கும் 24 வீத சம்பள அதிகரிப்பு : சஜித் உறுதி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்