ரணில் வழங்கியுள்ள 12 புதிய நியமனங்கள்
சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க, பத்து அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களையும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களையும் சற்று முன்னர் நியமித்துள்ளார்.
இந்த தகவலை அதிபர் ஊடக மையம் உறுதியளித்துள்ளது.
இந்த நியமனங்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர்கள்
அந்தவகையில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக ஏ. சி. மொஹமட் நஃபீல், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் மாகாண அலுவல்கள் அமைச்சின் செயலாளராக பி. பி.யசரத்ன, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக சமன் தர்ஷன பாடிகோராள ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சுற்றாடல் அமைச்சின் செயலாளராக பி. கே. பி. சந்திரகீர்த்தி, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளராக கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக கலாநிதி தர்மசிறி குமாரதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடமத்திய மாகாணத்தின் பிரதம செயலாளராக ஆர்.எம்.டபிள்யூ.எஸ். சமரதிவாகர மற்றும் மேல் மாகாண பிரதம செயலாளராக எஸ்.எல்.டி.கே. விஜயசிங்க ஆகியோரை ரணில் விக்ரமசிங்க, நியமித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |