பட்டலந்தை கொலைகளின் பின்னணியில் ரணில் : அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள்
இலங்கையில் கலவரங்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டமைக்கும் அப்போதைய இளைஞர் விவகார அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) தொடர்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்னிலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இராணுவ காவல்துறையின் நிழற்படபிடிப்பாளராக இருந்த இந்திராந்த சில்வா குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இளைஞர் விவகார அமைச்சராக இருந்த போது பட்டலந்தை உள்ளிட்ட சித்திரவதைக் கூடங்களில் இளைஞர்களைக் கொலை செய்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்களால் பார்த்த சாட்சி
அத்துடன் இளைஞர்களைக் கொலை செய்யும் நடவடிக்கைகளில் ரணில் விக்ரமசிங்க எவ்வாறு ஈடுபட்டார் என்பதை இந்திராந்த சில்வா தனது கண்களால் பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொலைகள் நடப்பதற்கு முன்பு முன்னாள் இராணுவ அதிகாரி புகைப்படங்களை எடுத்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்தக் குற்றங்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வதாக இந்திராந்த சில்வா கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 4 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்