அமைச்சு பதவிக்கு அழைப்பு விடுத்த ரணில்: ஏற்க மறுத்த மூவர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, விஜயதாச ராஜபக்ச ஆகியோர் அமைச்சு பதவிகளை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதமராக பதவிப் பிரமாணம் செய்த பின்னர், அமைச்சு பதவிகளை ஏற்குமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அவர்களில் இவர்கள் மூவரும் அமைச்சு பதவிகளை ஏற்க மறுத்துள்ளனர்.
இதனிடையே நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியின் சபை முதல்வர் பதவியை ஏற்க முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சபை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்து அவர் இந்த மறுப்பை தெரிவித்துள்ளார்.
தினேஷ் குணவர்தன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் சபை முதல்வராக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்