நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் உலகளாவிய முன்னேற்றத்தை திருப்திப்படுத்த முடியாது: ரணில் வலியுறுத்து
நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் உலகளாவிய முன்னேற்றத்தை திருப்திப்படுத்த முடியாது என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய முயற்சி
மேலும், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் 12% முன்னேற்றமே காணப்படுவதாகவும் ஏனைய முக்கியமான இலக்குகளில் 30% இன்னும் எட்டப்படவில்லை எனவும் அதிபர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, 2015 இல் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 17 நிலையான அபிவிருத்தி இலக்குகளை உள்ளடக்கிய நிலையான அபிவிருத்திக்கான நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் கவனம் செலுத்திய அதிபர், அதே ஆண்டில் COP21 இல் 196 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாரிஸ் உடன்படிக்கை மற்றொரு தனித்துவமான உலகளாவிய முயற்சி எனவும் தெரிவித்துள்ளார்.