சனத் நிஷாந்தவின் உயிரிழப்பிற்கு ரணில் விக்ரமசிங்க நேரில் சென்று இரங்கல்
Colombo
Ranil Wickremesinghe
Sri Lanka
Sanath Nishantha
By Sathangani
கொழும்பில் இன்று (25) விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு அரசியல் மட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு சென்ற அதிபர் ரணில் விக்ரமசிங்க, உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இல்லத்திற்கு சென்று
இராஜாங்க அமைச்சரின் கொழும்பில் உள்ள இல்லத்திற்கே அதிபர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சனத் நிஷாந்தவின் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், காலையில் இருந்து பெருமளவு அரசியல்வாதிகள் வைத்தியசாலையில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |