தலைவராக தெரிவான சிறீதரனுக்கு ரணில் அனுப்பிய செய்தி!
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அணிசேரா மாநாட்டுக்காக உகாண்டா சென்றுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் நேற்று முன்தினம் (21) தெரிவு செய்யப்பட்டார்.
தலைவர் தெரிவுக்கான வாக்கெடுப்பு
இந்நிலையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பு திருகோணமலையில் இடம்பெற்றது.
இதன்படி வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் 184 வாக்குகளையும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
மேலும், வரலாற்றில் முதற்தடவையாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஒருவர் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதற்தடவை ஆகும்.
அதிபர் உகாண்டாவிற்கு விஜயம்
அதற்கமைய இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி. சிறீதரனுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அணிசேரா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அதிபர் உகாண்டா தலைநகர் கம்பாலாவிற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |