சிறிலங்கா இராணுவத்தளபதி தொடர்பில் ரணிலின் உத்தரவு
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கு 2022 டிசம்பர் 31 ஆம் திகதி முதல் ஒரு வருட சேவை நீடிப்பை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆயுதப் படைகளின் கட்டளைத் தளபதி என்ற வகையில் வழங்கியுள்ளார்.
லெப்டினன்ட் ஜெனரல் லியனகே சிறிலங்கா இராணுவத்தின் 24வது தளபதியாக 2022 ஜூன் 01 முதல் அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார்.
கோட்டாபய ராஜபக்சவால் நியமனம்
லெப்டினன்ட் ஜெனரல் லியனகே ஒரு கடெற் அதிகாரியாக 1986 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி சிறிலங்கா இராணுவத்தின் வழமையான படையில் இணைந்து 26 ஆம் திகதி வழமையான உள்வாங்கல் - 26 இல் தியத்தலாவவில் உள்ள புகழ்பெற்ற சிறிலங்கா இராணுவ அகாடமியிலும் அதன் பின்னர் பாகிஸ்தான் இராணுவ அகாடமியிலும் அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றார்.
அதிகாரி கடெற் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவுடன், அவர் கஜபா படைப்பிரிவில் இரண்டாவது லெப்டினன்ட் பதவியில் நியமிக்கப்பட்டார்.