காசா குழந்தைகள் நிதியத்துக்கு கிழக்கு மாகாண ஆளுநர் நிதி வழங்கி வைப்பு!
அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள காசா குழந்தைகள் நிதியத்துக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் 5 இலட்சம் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கி வைத்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான இப்தார் கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிதிக்கு வழங்குமாறு அனைத்து அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில்,காசாவில் இடம்பெற்று வரும் மோதல்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இப்தார் மாதத்தில் வழங்குவதற்காக இந்த நிதியை செந்தில் தொண்டமான் வழங்கியுள்ளார்.
நிதி நன்கொடை
மேலும் காசா குழந்தைகள் நிதியத்துக்கு இதுவரை 57 இலட்சத்து 73 ஆயிரத்து 512 ரூபா நன்கொடையாக கிடைக்கப்பெற்றுள்ளது.
காசாவில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நலன்புரி தேவைகளுக்காக குறித்த நிதி விரைவில் அனுப்பிவைக்கப்பட உள்ளது.
இந்த நிதியத்துக்கு வர்த்தகர்கள், பொது அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினரும் உதவிகளை வழங்கிவரும் நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முதல் அரசியல் தலைமையாக இந்நிதியை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |