கொழும்பிலுள்ள சீன துதரகம் வெளியிட்ட அறிவிப்பு
அதிபர் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் கடன் தொடர்பான விடயங்கள் தொடர்பில் சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் தலைவர் வூ புலினுடன் காணொளி அழைப்பின் ஊடாக கலந்துரையாடியுள்ளார்.
“பயனுள்ள” மெய்நிகர் கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இருதரப்பு ஒத்துழைப்பு
On January 10, Wu Fulin, Chairman of the Export-Import Bank of China, held a fruitful video conference with H.E. Ranil Wickremesinghe, President and Minister of Finance of Sri Lanka, and exchanged views on bilateral cooperation and Sri Lanka's current debt issues.
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) January 11, 2023
1/ pic.twitter.com/7bRsc06d7s
இக்கலந்துரையாடலின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்க இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் இலங்கையின் தற்போதைய கடன் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார மீட்சி
இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தவும், நாட்டினது பொருளாதார மீட்சி மற்றும் நிலையான அபிவிருத்திக்ககாக உழைக்கவும் இரு தரப்பினரும் இணங்கிக்கொண்டனர்.#China #SriLanka
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) January 12, 2023
"இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு உதவவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்" என்று சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.