10 நாடுகளின் தூதுவர்களுடன் ரணில் கலந்துரையாடல்
அதிபர் ரணில் விக்ரமசிங்க, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 10 நாடுகளின் தூதுவர்களுடன் இன்று (11) அதிபர் செயலகத்தில் கலந்துரையாடியுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பில் அதிபர் தூதுவர்களிடம் தெரிவித்ததாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், அந்த நாடுகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்
அத்தோடு, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இன்று (11) முதல் ஒரு வார காலம் நாட்டில் தங்கியிருந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சு, மத்திய வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் பல தரப்பினருடன் பிரதிநிதிகள் கலந்துரையாடவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |