இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் ரணில் முக்கிய பேச்சு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடன் (s.jaishanker)முக்கிய சந்திப்பை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு 8வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது நடைபெற்றது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டாண்மைகளை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது.
பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு
பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்சார் கூட்டாண்மை மாநாட்டிற்காக ஓமானுக்கு(oman) பயணம் செய்துள்ள ரணில் விக்ரமசிங்க, கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை தொடர்பான முக்கியமான பிரச்சினைகளை கையாள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமம் வெளியேற்றம்
இதேவேளை இலங்கையிலிருந்து அதானி குழுமம் வெளியேறியதன்மூலம் இந்தியா இலங்கையை கைவிட்டு விட்டதாக ரணில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
