பின்வாங்கிய ரணில்..! நிறைவேற்றப்படவுள்ள அரசாங்கத்தின் தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் நீக்குவதற்கு எதிராக நீதிமன்றம் செல்லப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அண்மையில் ரணில் தனது கட்சி செயற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்தோடு, சிறப்புரிமைகள் நீக்கம் குறித்து முன்னாள் ஜனாதிபதிகளுடன் ஒரு குழுவாக கலந்துரையாடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்ட நடவடிக்கை
எனினும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்தவையும் மைத்திரியையும் சந்தித்தபோது, இந்த விவகாரம் தொடர்பில் தன்னிடம் சில கருத்துக்களை அவர்கள் தெரிவித்ததாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதிகள் அனைவரும் இணைந்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், குறித்த திட்டத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விலகுவதாக தற்போது கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
