சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க இலங்கையில் கடுமையாகும் சட்டம்

Ranil Wickremesinghe Child Abuse
By Vanan May 15, 2023 10:46 AM GMT
Report

சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையான சட்டத்தை உருவாக்குமாறு சட்டத் துறையினருக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஒரு சில ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியாக இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை விரைவாக தடுக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய அதிபர், அவ்வாறான செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டக் கட்டமைப்பு ஒன்றின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

குழந்தைகளின் பாதுகாப்பிற்கு தனியான சட்டம்

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க இலங்கையில் கடுமையாகும் சட்டம் | Ranil Orders Strict Legislation Child Abuse

களுத்துறை ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் இருந்து குதித்து 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், களுத்துறை தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரால் 16 சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றமை தொடர்பில் கவனம் செலுத்திய அதிபர் இந்தப் பணிப்புரையை வழங்கினார்.

நாட்டின் குழந்தைகளை பாதுகாப்பதற்கு தனியான சட்டமொன்றை கொண்டு வர வேண்டும் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக தற்போதுள்ள சட்டங்களைத் திருத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியஅதிபர், இந்தச் சட்டக் கட்டமைப்பை தயாரிக்கும்போது, கையடக்கத்தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றை பயன்படுத்தி சிறுவர் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க இலங்கையில் கடுமையாகும் சட்டம் | Ranil Orders Strict Legislation Child Abuse

அதன்படி, உரிய சட்டங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் அவை துரிதமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

பாடசாலை பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய அதிபர், பெற்றோர் - பிள்ளை உறவுகள் குறித்தும், வீட்டுச்சூழலில் மனநலம் தொடர்பான புதிய கருத்தாடல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

சிறுவர் சந்ததியினரைப் பாதுகாப்பதற்கு கடுமையான சட்டங்களைக் கொண்டுவரும் அதேவேளையில், பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு பரந்த மனப்பான்மை கொண்ட பிள்ளையை உருவாக்குவதற்கும் சமூகத்தின் மனப்பாங்கை வளர்ப்பதற்கு அரச மற்றும் தனியார் நிறுவன மட்டத்தில் தனியான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் அதிபர் ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022