அமெரிக்கா விடயத்தில் அநுரவின் தில்லுமுல்லு: சந்தேகம் வெளியிட்ட ரணில்!
இறக்குமதிகள் மீதான பரஸ்பர வரி குறித்து அமெரிக்காவுடன் அரசாங்கம் வெற்றிகரமான பேச்சுவார்த்தை நடத்தியதாக அறிவித்தமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் முன்னாள் ஜனாதிபதி இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் கூற்று
அதன்போது, “பரஸ்பர வரி குறித்த தனது நிலைப்பாட்டை மாற்ற அமெரிக்காவை சமாதானப்படுத்துவதில் வெற்றி பெற்றதாக அரசாங்கம் கூறுகிறது.
இது எப்படி முடியும்? சீனா மற்றும் பெரிய நாடுகளுடனான தனது பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா இன்னும் முடிக்கவில்லை.
ஆரம்பத்தில் பெரிய நாடுகளில் கவனம் செலுத்தும். பின்னர் சிறிய நாடுகளில் கவனம் செலுத்தும்," என அவர் கூறியுள்ளார்.
அநுரவின் அறிவிப்பு
இவ்வாறானதொரு பின்னணியில், சமீபத்தில் விதிக்கப்பட்ட வரிகள் குறித்து அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் பயனுள்ளதாக இருந்ததாக நேற்றையதினம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்தார்.
இதன்படி, குறித்த விடயம் தொடர்பான விளைவுகள் விரைவில் ஒரு கூட்டு அறிக்கையில் முறையாக வெளியிடப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
