அடுத்த திட்டத்தை வகுத்தார் ரணில்!
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிப்பதற்காக அரசாங்கத்தில் அமைச்சுக்களை பொறுப்பேற்காத கட்சி தலைவர்களை இணைத்து தேசிய சபை ஒன்றை நிறுவுவதற்கு பிரதமர் ரணில் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கூறுகையில்,
கோட்டாபயவின் அரசாங்கத்தில் இருந்து விலகி, சுயாதீனமாக செயற்பட்ட 10 கட்சிகளுடன் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
பிரதமரின் தகவல்படி 10 துறைசார் மேற்பார்வை குழுக்கள் நிறுவப்படும். அத்துடன் 5 பிரதான குழுக்கள் நிறுவப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதம் வரைக்குமான வரவுசெலவுத்திட்டம் ஒன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 21ஆம் அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
