இந்திய குடியரசு தலைவருக்கு ரணில் அனுப்பிய கடிதம்..!
Ranil Wickremesinghe
President of Sri lanka
India
By Kanna
இந்தியாவின் புதிய குடியரசு தலைவர் திரௌபதி முர்முக்கு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க கடிதமொன்று அனுப்பியுள்ளார்.
இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தே ரணில் விக்ரமசிங்க குறித்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
திரௌபதி முர்மு
இந்தியாவில் நடந்த குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 64 சதவீத வாக்குகளை வெற்றியினை தன்வசமாக்கியிருந்தார்.
இதனை தொடர்ந்து நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று காலை திரௌபதி முர்முவிற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

