அதிபர் தேர்தலில் அன்னம் சின்னத்தில் களமிறங்குகிறார் ரணில்
SJB
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Jaso
அடுத்த அதிபர் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுவை இணைத்து அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த நல்லாட்சி அரசில் அதிபராக இருந்த மைத்திரிபால சிறிசேனவும் அன்னம் சின்னத்திலேயே களமிறங்கியமை குறிப்பிடத்தக்கது.