பல சர்ச்சைகளை கிளப்பிய ரணிலின் உரை - வைரலாக பரவும் முகநூல் பதிவுகள்
மடுத் தேவாலய ஆணி மாத திருவிழாவின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றியமையை கண்டித்து சமூக ஊடகங்களில் பல சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன.
மன்னார் மடுத்திருவிழாவின் ஆணி மாத திருவிழா இலட்சக்கணக்கான பக்தர்களின் பங்கு பற்றுதலுடன் கடந்த 15 திகதி செவ்வாய் கிழமை இடம் பெற்றிருந்தது.
இலங்கை முழுவதும் இருந்து சுமார் ஐந்து இலட்சம் பக்தர்களும் அதே நேரம் ரணில் விக்கிரமசிங்க தொல்லியல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க செல்வம் அடைக்கலநாதன் ராஜங்க அமைச்சர் காதர்மஸ்தான் உட்பட பல அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையில் திருவிழா திருப்பலி நிறைவடைந்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உரையாற்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
முகநூல் பதிவுகள்

இவ்வாறான நிலையில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மடு திருவிழா திருப்பலியின் பின்னர் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டை தொடர்பில் சமூக வலைதளங்களில் எதிர்ப்புக்கள் கிழம்பியுள்ளது .
'மடுமாதாதலம் தேவாலயமா? அரசியல் மேடையா?'
'மல்க்கம் ரஞ்சித்தால் மன்னாருக்கு தெற்கிலிருந்து இறக்கப்பட்ட ஆயர் எவ்விதத்தில் ஆலயத்தில் ரணில் பேச அனுமதிக்க முடியும்?'
' ஏனைய குருக்கள் மௌனிகளானது ஏன்?'
' தமிழர் என்ற ஒரே காரணத்தினால் சிங்களத்தால் கொல்லப்பட்ட மன்னார் திருச்சபைக்குட்பட்ட குருமாருக்குதானும் நீதி கிடைத்துவிட்டதா?'
'தமிழன் குருதி தோய்ந்த கரங்களோடு பீடத்தில் ரணில் ஏற பாவமன்னிப்பு யார் கொடுத்தார்?' எனவும் மத ஸ்தலங்களை அரசியல் மேடையாக்க அனுமதிக்க வேண்டாம் என்ற அடிப்படையிலும் தமிழ் சிங்கள சமூக ஆர்வலர்கள் எதிர்பு பதிவுகளை இட்டு வருகின்றனர்.