மைத்திரி செய்ய நினைத்ததை ரணில் தடுத்தார்! சுமந்திரன் பகிரங்கக் குற்றச்சாட்டு
நல்லாட்சிக் காலத்தில் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) செய்ய நினைத்ததை அப்போதைய பிரதமரான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தடுத்தார், ரணில் செய்ய நினைத்ததை மைத்திரி தடுத்தார் என்பது எல்லாம் இப்போதுதான் எமக்குத் தெரியவருகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.
சமஷ்டி முறைமையினை ஏற்றுக் கொள்ளக் கூடிய சிங்களத் தலைவர்களும் உள்ளனர். ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) மற்றும் லக்ஸ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) ஆகியோர் இன்றும் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கூறிக் கொள்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “அக்கினி பார்வை” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் வழங்கிய செவ்வியின் காணொளி,