ரணிலின் சாணக்கிய வியூகம்! அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள கலக்கம்
அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்திற்கு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து நாடாளுமன்றில் பணியாற்ற உள்ளர் என தென்னிலங்கை ஊடகமொன்று செகய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய டயானா கமகேவிற்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட போதும் அது நிறைவேற்றப்படவில்லை. அதனால் அவர் அதிருப்தியில் உள்ளார்.
மேலும் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க ஐக்கிய மக்கள் சக்தி முயற்சித்து வருகிறது. இதனால் பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது.
அதனால் தனது முன்னைய தலைவரான ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற அவர் முடிவு செய்திருப்பதாக அறிய முடிகிறது.
மேலும் ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியூதின் கட்சியை சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்க தரப்பினரால் கைவிடப்பட்ட நிலையில் இவர்கள் ஒரு தனி அணியாக இணைந்து நாடாளுமன்றில் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் செயற்பட முடிவு செய்திருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.