தமிழர் பேச்சுக்களில் பெரியண்ணர் திடீர் நுழைவு!
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இன்று கொழும்பில் கால்பதித்து இலங்கை தொடர்பான களநிலவரங்களை ஆய்வு செய்த அதே நாளில், சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தமிழர் தரப்புடனான பேச்சுக்களுக்கும் தயாராகியுள்ளார்.
அந்த வகையில், வடக்கு - கிழக்கைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான பேச்சுக்கள் இன்று ஆரம்பிக்க உள்ளன.
இரண்டு நாட்களாக இடம்பெறவுள்ள இந்தப் பேச்சுக்களின் நிகழ்ச்சி நிரல்களின் படி, இன்று நல்லிணக்கப் பொறிமுறைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், பயங்கரவாத தடைச் சட்டம், காணி விவகாரங்கள் ஆகியன கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதே போல, நாளைய தினத்திற்கான நிகழ்ச்சி நிரலில் அதிகாரப் பகிர்விற்கான பேச்சுக்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுடன் இலங்கையை மீண்டும் கட்டி எழுப்பவேண்டுமானால் இனம் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என கடந்த மே தின உரையில் ரணில் விக்ரமசிங்க கூறிய நிலையில்,
இன்று சர்வதேச நாணய நிதியத்தின் குழு இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பதை கண்காணிக்கவும், இனிமேல் வழங்கப்படவேண்டிய அடுத்த கட்ட தவணைகள் குறித்த ஆய்வுகளைச் செய்வதற்காகவும் கொழும்பில் தங்கி இருக்கும் நேரத்தில், ரணிலின் இந்த தந்திரோபாயம் நகர்த்தப்படுகிறது.
இதற்கும் அப்பால், இந்த முறை இடம்பெறும் பேச்சு நகர்வுகளில் தமிழர் தரப்புடன் இந்திய பெரியண்ணர் தீவிரமாக இணைக்கப்பட்டுள்ளமை தெரிகிறது.
உண்மையில், இதன் பின்னணி என்ன? ஆராய்கிறது இன்றைய செய்தி வீ்ச்சு,
