அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள விசேட உத்தரவு
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan Peoples
President of Sri lanka
By Laksi
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறு அதிபர் ரணில் விக்ரமசி்ங்க (Ranil Wickremesinghe) பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் அனர்த்த நிலைமை குறையும் வரை நிவாரணப் பணிகளை தொடருமாறும் ரணில் தெரிவித்துள்ளார்.
இழப்பீடு வழங்க நடவடிக்கை
அதற்கமைய, அனர்த்த முகாமைத்துவ நிலையமும் உயிரிழந்த நபர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிபர் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த அடுத்த சில மாதங்களில் பல திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்