மீண்டும் இந்தியா பறக்கிறார் ரணில்
Ranil Wickremesinghe
Karnataka
India
By Sumithiran
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) நாளை மறுதினம் (8) மூன்று நாள் பயணமாக இந்தியாவிற்கு(india) விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான்காவது முறையாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டுள்ள ரணில்
இந்தியாவின் கர்நாடகாவின் பெங்களூரில், தி இந்து செய்தித்தாளின் ஐந்தாவது பதிப்பு தொடர்பாக நடைபெறும் விழாவில், சிறப்புரையாற்ற ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் ஸ்ரீ சித்தராமையா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார்.
இரண்டு நாள் நடைபெறும் இந்த நிகழ்வில் அரசியல், வணிகம், கல்வி, விளையாட்டு மற்றும் கலைத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொள்வார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்