பிள்ளையானைச் சிறையில் சந்திக்க முயன்ற ரணில்: கைதின் பின்னணியில் மறைமுக காரணம்!!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதானது, நிதிக் குற்றச்சாட்டை கடந்து ஒரு பாரிய காரணத்துக்காக இருக்கலாம் என தோன்றுகிறது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், பிள்ளையான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
அதனைதொடர்ந்து, பிள்ளைாயானுடன் எந்த சம்பந்தமும் இல்லாத ரணில் விக்ரமசிங்க அவரை சந்திக்க முனைந்தததாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், முன்னைய ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் சிறையில் இருந்தபடி பிள்ளையானே சம்பந்தப்பட்டிருப்பதாக அவருக்கு நெருங்கிய சகாவான அசாத் மௌலானா வெளிப்படுத்தயிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில், ரணில் விக்ரமசிங்க பிள்ளைாயானை சிறையில் சந்திக்க முயன்றதை ஒரு சாதாரண விடயமாக கடந்து விட முடியாது.
ஆகவே ரணிலின் கைது என்பது வெறுமனே நிதி மோசடிக்காக மாத்திரமே என ஏற்க முடியாத ஒரு விடயமாக இருக்கின்ற நிலையில், இதற்கு பின்னணியில் உள்ள பல விடயங்களை விளக்கமாக எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 8 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்