அதிபரை சந்தித்தார் புதிய காவல்துறை மா அதிபர்
Ranil Wickremesinghe
Sri Lanka
By Shalini Balachandran
புதிய காவல்துறை மா அதிபராக நியமனம் பெற்றிருக்கும் தேசபந்து தென்னகோன் அதிபர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பானது இன்று(29) அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
நாட்டின் 36 ஆவது காவல்துறை மா அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையிலேயே காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதிபரை சந்தித்துள்ளார்.
அத்தோடு புதிய காவல்துறை மா அதிபருக்கு வாழ்த்துக் கூறிய ரணில் அவருடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியுள்ளார்.
அதனையடுத்து புதிய காவல்துறை மா அதிபர் சம்பிரதாய பூர்வமாக அதிபருக்கு நினைவுச் சின்னமொன்றையும் வழங்கியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி