யாழில் போராட்டத்தில் குதித்த மக்கள்! ரணிலிடம் கையளிக்கப்படவுள்ள மகஜர் (படங்கள்)
Jaffna
Ranil Wickremesinghe
Sri Lanka
Northern Province of Sri Lanka
By pavan
யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராக கண்டனப் போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
உடுப்பிட்டி சந்தியில் நடைபெற்ற போராட்டத்தில் பெருமளவானவர்கள் கலந்துகொண்டனர்.
இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் உடுப்பிட்டி பகுதியில் கடையடைப்பும் இடம்பெற்றது.
பிரதேச செயலகத்திற்கு பேரணி
உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மீள திறக்கப்பட்ட மதுபானசாலையினால் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அதனை உடனடியாக அகற்றக்கோரி உடுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள கடைகளை பூட்டி கடையடைப்பிற்கு உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் ஒன்றாக சேர்ந்து அழைப்புவிடுத்தது.
போராட்டத்தின் இறுதியில் பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்று ரணில் விக்ரமசிங்கவிற்கு மகஜர் கையளிக்கப்படவுள்ளதுடன் அதன் பிரதிகள் பல்வேறு தரப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்