ரணிலுக்கு எதிரான யாழ் போராட்டம் - நீதிமன்றின் அறிவிப்பு!
Jaffna
Ranil Wickremesinghe
Sri Lanka
SL Protest
President of Sri lanka
By Kalaimathy
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அதிபருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கான வழக்கை மே மாதம் 8ம் திகதி தவணையிட்டு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் திகதி ரணிலின் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகளின் வழக்கு விசாரணை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்றது.
ஒத்திவைப்பு
இதன்போது வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் சங்க செயலாளர் , பல்கலைக்கழக மாணவர் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
மேலும் சில சந்தேக நபர்கள் வழக்கில் இணைக்கப்படவிருப்பதால்
பதில் நீதவான் தவபாலன் வழக்கை மே மாதம் 8ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
குறித்த வழக்கில் சட்டத்தரணி க.சுகாஷ் எதிராளிகள் சார்பில் முன்னிலையானார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி