யாழில் ரணில் தலைமையில் விசேட கூட்டம்! காணி பிரச்சினைக்கு தீர்வு
Sri Lankan Tamils
Jaffna
Ranil Wickremesinghe
By pavan
யாழ்ப்பாணத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்று நடைபெற உள்ளதாக தகவல் அறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணிப் பிரச்சினை
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெறும் இந்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அமைச்சுக்களின் செயலாளர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினைத் தொடர்ந்து இரு மாவட்டங்களிலும் உள்ள காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் நடமாடும் சேவையொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 10 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்