வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக பல பணிகளைச் செய்த ரணில்! சித்தார்த்தன் பாராட்டு
"அதிபர் ரணில் விக்ரமசிங்க ( (Ranil Wickremesinghe) வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காகப் பல பணிகளைச் செய்துள்ளார்." என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Siddarthan) தெரிவித்துள்ளார்.
நேற்று (24) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக (University of Jaffna) மருத்துவ பீடத்திற்கான கட்டடத்தை ரணில் திறந்து வைத்த நிகழ்வில் சித்தார்த்தன் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி
இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில், "ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்று இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காகப் பல பணிகளைச் செய்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு வழங்கப்படும் இந்தக் கட்டடமானது வடக்குக்கு வழங்கப்படும் அபிவிருத்தியின் மற்றுமொரு உதாரணமாகவே நான் காண்கின்றேன்.
காணி வழங்கல் விவகாரம்
குறிப்பாக காணி வழங்கல் விவகாரம் தொடர்பில் வடக்கு மக்களின் சார்பாக அவர் தீர்மானங்களை எடுத்தார்.
அத்துடன் அதிபர் ரணில் பிரதமராக இருந்தபோது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காகப் பல பணிகளைச் செய்துள்ளார்." என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |