ரணிலுக்கு துணிவு வந்துவிட்டதா..! மொட்டுக்குள் வெடித்த பூகம்பம்
தனது அரசியல் சுயநலம் கருதியே ரணில் விக்ரமசிங்க தான் நினைத்த மாதிரி ஆடுகின்றார் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றம் சாட்டினார்.
நேற்றைய தின அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் "பொதுஜன பெரமுனவுடன் பேசாமல் அமைச்சரவையை மாற்றுவதற்கு ரணில் விக்ரமசிங்கவிற்கு துணிவு வந்துவிட்டதா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ரணில் கவிழ்ந்தே தீருவார்
"ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவை மொட்டுக் கட்சி வாபஸ் பெற்றால் அவர் கவிழ்ந்தே தீருவார்" என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவரின் பதவியை சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு வழங்குவது நியாயமற்றது என சாகர காரியவசம் கூறியுள்ளார்.
அத்துடன், தவறை தவறென சுட்டிக்காட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் அஞ்சியதில்லை எனவும் இதற்கமைய ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட நடவடிக்கை தவறானதெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.