நட்டஈடு கோரி மைத்திரி - ரணிலுக்கு நோட்டீஸ்
srilanka
ranil wickremesinghe
By Vasanth
ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்த சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க என்பவரால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் நட்டஈடு கோரி நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன உட்பட மேலும் 10 பேருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஈஸ்டர் தினத்தன்று தமது பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறியமைக்காக சங்கரிலா ஹோட்டல் நிர்வாகம், 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக வழங்க வேண்டும் என்கிற நோட்டீஸ் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்