முதலாவது தோல்வியை சந்தித்த ரணில்! நேரடியாக சாடிய நாடாளுமன்ற உறுப்பினர்
Sri Lanka Parliament
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
By Kiruththikan
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முதல் யோசனையே தோல்வியடைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (17) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத் தொடரின் போது பிரதி சபாநாயகர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பில் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட அஜித் ராஜபக்க்ஷவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் உரையின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் பதவி வகித்த நாட்டில் பெண் பிரதிநிதி ஒருவர் நாடாளுமன்றில் பிரதி சபாநாயகர் பதவிக்கு தெரிவு செய்ய முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் பதவிக்கு நான் தகைமையுள்ள நபர் என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன சபையில் தெரிவித்தார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்