சிறப்பு அறிக்கையை ஒன்றை வெளியிட ரணில் விக்ரமசிங்க முடிவு
உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றான சிங்கராஜா வனப்பகுதி உட்பட மலைக்காடுகள் மற்றும் ஈரநிலங்களை பாதுகாப்பதற்கான தேசிய கொள்கை குறித்து முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த சிறப்பு அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. சிங்கராஜா வனத்தை பாதுகாக்க இது ஒரு பசுமையான ஆண்டு என்ற அறிவிப்பும் இங்கு முன்வைக்கப்பட உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நிறமான பச்சை நிறத்தை முன்னிலைப்படுத்தி காடுகள் உட்பட நாடு முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தவும் கட்சி திட்டமிட்டுள்ளது.
மேலும் ரணில் விக்ரமசிங்க தனது சிறப்பு அறிக்கையில், எதிர்கால ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் யாரும் செல்வாக்கு செலுத்த முடியாத சுற்றுச்சூழல் கொள்கையை நிறுவுவதைக் குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.