சிறிலங்காவின் அதிபராக ரணிலுக்கே தகுதி.! ஏ.எச்.எச்.எம்.நபார் உறுதி
இடம்பெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள ரணிலே வெற்றிபெறுவார் இது உறுதியானது என முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் கல்முனை மேற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளருமான ஏ.எச்.எச்.எம்.நபார் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள ரணிலின் வெற்றி குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நீண்ட கால அனுபவம்
"பல அரசியல் கட்சிகள், பல்துறைசார்ந்த சமூகவியல் அமைப்புகள், கல்விமான்கள், புத்திஜீவிகள் போன்ற பலரின் ஆதரவோடு பொது வேட்பாளராக நிச்சயமாக போட்டியிடுவார்.

எனவே நாட்டின் தேசிய சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களில் இவருக்கு பாரிய நீண்ட கால அனுபவம் உண்டு.
நிலையான தீர்வு
இதனால் இவரால் மாத்திரமே நாட்டின் சமகால அரசியல் பொருளாதார சமூகங்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க முடியும்.

ஆக இந்த உண்மையை உள்ளத்தினால் ஏற்றுக்கொண்ட நாட்டின் குடிமக்கள் நிச்சயமாக சிறிலங்கா அதிபராக ரணிலையே வெற்றி பெற செய்வார்கள்." என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்