இந்திய காற்றாலை மின் திட்டம் : அநுர அரசின் நகர்வை உன்னிப்பாக கண்காணிக்கும் ரணில்
இந்தியாவுடனான முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க காத்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தலைநகர் புதுடில்லியில் நடைபெற்று வரும் 'NXT சர்வதேச மாநாட்டில்' பங்கேற்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு நடைபெற்ற பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தப் பயணத்தின் போது, ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து கலந்துரையாடினார்.
ரணில்- மோடி சந்திப்பு
மாநாட்டின் இறுதியில் நடைபெற்ற நேர்காணலில் பேசிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது
"பிரதமர் மோடியும் நானும் எங்கள் ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து ஒன்றாக விவாதித்தோம். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை இந்தியாவிற்கு விற்பனை செய்வதே எங்கள் முக்கிய யோசனையாக இருந்தது. நாங்கள் 25 அல்லது 50 ஜிகாவாட் வழங்க முயற்சித்தோம். இரண்டாவதாக, திருகோணமலையை ஒரு பிராந்திய திட்டமிடல் மையமாக மாற்றுவது. நாங்கள் அந்த இடத்தில் ஒரு சுத்திகரிப்பு நிலையத்தைக் கட்டி, நாகப்பட்டினத்திலிருந்து வரும் எண்ணெய் குழாய் வழியாக அதை மேம்படுத்த திட்டமிட்டோம்.
அந்த திட்டத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை நாம் பார்க்க வேண்டும். நாம் அதை தமிழ்நாட்டின் மதுரை வரை இணைக்க வேண்டும். இவை தொடர்புடைய கேள்விகள்.
காற்றாலை மின் திட்டத்தில் சிக்கல்
துரதிஷ்டவசமாக, எங்கள் முதல் திட்டமான காற்றாலை மின் திட்டத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். புதிய அரசு என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க நாங்கள் காத்திருக்கிறோம்.
கேள்வி - சில மாதங்களுக்கு முன்பு சீனாவிலிருந்து ஏராளமான ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கைக்கு வந்ததைக் கண்டோம். இந்தியா அதில் கவனம் செலுத்தியதா?
ஆராய்ச்சி கப்பல்களால் இலங்கைக்கு என்ன நன்மை..!
ரணில் விக்ரமசிங்க - சீனாவும் பல நாடுகளும் ஆராய்ச்சிக் கப்பல்களை அனுப்பியிருந்தன. நான் நிறுத்தி அதைப் படித்தேன். அங்கு மற்ற நாடுகள் ஆராய்ச்சி செய்வதைக் கண்டோம். ஆனால் எங்களுக்கு எந்த வணிக நன்மையும் இல்லை. வணிக ரீதியான நன்மைகளை உருவாக்கும் ஒரு சட்டத்தை நாம் கொண்டு வர வேண்டும். நாடாளுமன்றம் அதைப் பரிசீலிக்கும் என்று நான் நினைக்கிறேன். இது அதை விட விரிவானது என்று நான் நினைக்கிறேன். எந்த வணிக நன்மையும் இல்லாமல் அவை ஏன் நமது கடல்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றன?
கேள்வி - சீனாவும் இந்தியாவும் சண்டையிடும்போது உங்களுக்கு ஒரு நன்மை இருக்கிறதா?
இந்தியாவுக்கு இந்த விடயத்தில் எப்படி விளையாடுவது என்று தெரியும். சரி, நாம் ஏன் இதில் தலையிடவேண்டும். நீங்க உங்க விளையாட்டை விளையாடுறீங்க. நாங்கள் எங்கள் விளையாட்டை விளையாடுகிறோம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
