கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க
hospital
ranjan ramanayake
By Kanna
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சன் ராமநாயக்க மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலையின் எலும்பியல் சிகிச்சை பிரிவிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன எக்கநாயக்க தெரிவித்தார்.
முன்னதாக ரஞ்சன் ராமநாயக்க முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்காக கராப்பிட்டிய பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார். இருப்பினும் அங்கு வசதிகள் போதாததன் காரணமாக தற்பொழுது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்