ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனு விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் (Ranjan Ramanayake) வேட்புமனுவை நிராகரிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் இன்று (30.10.2024) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனைகளை ஏற்று, பிரீத்தி பத்மன் சூரசேன, குமுதினி விக்ரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பொதுத் தேர்தல்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் கம்பஹா (Gampaha) மாவட்டத்தில் ரஞ்சன் ராமநாயக்க வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் அவருடைய வேட்பு மனுவை நிராகரிக்குமாறு கோரி கம்பஹா மாவட்ட சுயேட்சைக் குழு வேட்பாளர் கே.எம். மஹிந்த சேனாநாயக்கவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள், கம்பஹா மாவட்ட தேர்தல் அதிகாரி, ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |