ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம்! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
SRILANKA
ranjan ramanayake
samagi jana balawegaya
By Vasanth
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் குறித்த உத்தரவு எதிர் வரும் மார்ச் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சிறைவாசம் காரணமாகத் தனது நாடாளுமன்ற ஆசனத்தை நீக்குவதைத் தடுக்க இடைக்காலத் தடை உத்தரவு கோரி ரஞ்சன் ராமநாயக்க மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதி யரசர் அர்ஜுன ஒபயசேகர தலைமையிலான நீதிமன்ற அமர்வு முன் னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஜனவரி 12 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.