ரஞ்சன் விடுதலை! பரிந்துரைக்கின்றது ஆளும் கட்சி
Ranjan Ramanayake
Gotabaya Rajapaksa
SriLanka
Geetha Kumarasinghe
Chandrika Bandara Nayaka Kumaratunga
By Chanakyan
கடூழியச்சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு (Ranjan Ramanayake) பொதுமன்னிப்பு அளிக்குமாறு சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க (Geetha Kumarasinghe) கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு (Gotabaya Rajapaksa) கடிதம் ஒன்றினையும் அவர் அனுப்பிவைத்துள்ளார்.
சிறைச்சாலைகள் தினத்தை முன்னிட்டு, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) மற்றும் முன்னாள் சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க ( Chandrika Bandara Nayaka Kumaratunga) உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இவரது விடுதலை குறித்து கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.