சிறுமி வன்புணர்வு : சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு கடூழிய சிறை
Sri Lanka Army
Colombo
Sri Lanka
Sri Lanka Magistrate Court
By Sumithiran
தனது உறவினரின் சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு 15 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே மேற்படி தீர்ப்பை அறிவித்தார். 24 வருடங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
24 வருடங்களுக்கு முன்னர்
இதன்படி கடந்த 2009 ஓகஸ்ட் 1 முதல் 31 ஆம் திகதி வரை 16 வயதுக்குட்பட்ட உறவினரின் சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்ததாக பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக நடைபெற்ற நீண்ட விசாரணையின் முடிவில், குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பு நிரூபித்துள்ளதாகவும், அவர் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும் 13 மணி நேரம் முன்
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
1 நாள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி