வீதியில் நடமாடியவர்களுக்கு “ரெபிட் அன்டிஜன்” - 40 பேருக்கு தொற்று
தனிமைப்படுத்தல் ஊரடங்குக் சட்டத்தை மீறி, பதுளை மாநகரில் சுற்றித் திரிந்த 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்கு உள்ளான அனைவரும் இன்று உரிய சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பதுளை மாநகர பிரதம பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பியல்பத்ம தெரிவித்துள்ளார்.
பதுளைப் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் ஆகியோர் இணைந்து பதுளை மாநகரில் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பதுளை மாநகரில் எக்காரணம் இன்றி சுற்றித்திரிந்த 250 பேர் “ரெபிட் அன்டிஜன்” பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களின் பரிசோதனை அறிக்கைக்கமைய 40பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்
அவர்கள் அனைவரும் பதுளை, பிந்துனுவௌ மற்றும் ககாகொல்ல கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பதுளை மாநகரில் தனிமைப்படுத்தல் ஊரடங்கும் சட்டத்தை மீறி வெறுமனே சுற்றித் திரிந்த மேற்குறிப்பிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.