இலங்கையின் அரச வருமானம் சடுதியாக அதிகரிப்பு - இலங்கை மத்திய வங்கி!
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
Sri Lanka Government
Economy of Sri Lanka
By Pakirathan
கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது நாட்டினுடைய அரச வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அந்தவகையில், 2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் அரச வருமானமானது 1,806.7 பில்லியன் ஆக உள்ளது.
இது கடந்தகால 1,322 பில்லியனுடன் ஒப்பிடும் போது 36% அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அதிகரித்துள்ள அரச வருமானம்
இதேவேளை, ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், நவம்பரில் அரச வருமானம் 60% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஒக்டோபரில், 138 பில்லியனாகவும், நவம்பரில், 220.7 பில்லியனாகவும் அரச வருமானம் உள்ளது.
அதேசமயம், 2022 ஒக்டோபரில், 120.3 பில்லியனாக இருந்த அரச வருமானம் நவம்பரில் 205.1 பில்லியனாக உயர்ந்துள்ளது, இது 70% அதிகரிப்பைக் காட்டுகிறது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி